150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடை விதித்த ஹாங்காங்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அதிக ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் சுமார் 150 நாடுகளிலிருந்து வரும் போக்குவரத்து விமானங்களை ஹாங்காங் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இறுதியில் இருந்து வேகமாக பரவும் ஓமிக்ரான் மாறுபாட்டின் சுமார் 50 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து உள்வரும் விமானங்களை பரிமாற்றம் உட்பட தடை செய்தது.

You May Also Like

About the Author: kalaikkathir