கனடா பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை

இலங்கை பயணிக்கவுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு கனடா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது,

இலங்கைக்கான பயண ஆலோசனையில் கனடா இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்கள், மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களுக்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது,

எனவே இந்நிலைமையை கருத்திற் கொண்டு இலங்கைக்கு பயணிக்கும் தமது நாட்டு பிரஜைகளுக்கு உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் தம்வசம் வைத்திருக்குமாறு கனேடிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடி காரணமாக மளிகைக் கடைகள்,எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் வரிசையில் காத்திருக்க நேரிடலாம் எனவும் கனேடிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir