போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஹொண்டுராஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டூராஸின் முன்னாள் ஜனாதிபதி ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு அந்நாட்டினால் கோரிக்கை விடுக்கப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் தலைநகரிலுள்ள அவரது இல்லத்தை சூழ பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

பின்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதும், பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்த போது முன்னாள் ஜனாதிபதி ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸ் சரணடைந்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆட்சியிலிருந்த ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னான்டஸ் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir