கார்கிவ் பொலிஸ் கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – பற்றி எரிகிறது உக்ரைன்!

உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள பொலிஸ் அலுவலக கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் உக்ரைன் கடும் சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ளபொலிஸ் அலுவலக கட்டடத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

கார்கிவ் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 112 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாதுகாப்புத்துறை, உளவுத்துறை கட்டடங்கள் அருகேயுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு ரஷ்யா அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir