உக்ரைனில் ஊடகவியலாளர் பலி

உக்ரைனில் போர் செய்தி சேகரிக்க சென்ற ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவன வீடியோ கிராபர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபாக்ஸ் நியூஸ் என்ற செய்தி நிறுவனத்தின் வீடியோ கிராபர், பியர் ஜாக்ர்ஸெவ்ஸ்கி, இவர் உக்ரைனில் கிய்வு நகருக்கு தனது நண்பர் பெஞ்சமின் ஹால் என்பவருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந் போது, ஹோரென்காவில் நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் வாகனம் தீக்கிரையானது.

இதில் ஜாக்ர்ஸெவ்ஸ்கி பலியானார், பெஞ்சமின் ஹால் காயமடைந்தார், லண்டனில் பணியாற்றி வந்த ஜாக்ர்ஸெவ்ஸ்கி, கடந்த பெப்ரவரி மாதம் தான், உக்ரைனில் போர் செய்திகளை வீடியோவாக எடுக்கும் பணிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir