கிளிநொச்சி- புதுமுறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்த இரு பிள்ளைகளின் தந்தை சில்லுக்குள் சிக்குண்டு நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி- புதுமுறிப்பு பகுதியில் நேற்று இரவு உழவு இயந்திரம் ஒன்றில் சாரதியும் அவருக்கு அருகில், மட்காட்டில் உட்கார்ந்தவாறு மற்றொருவரும் பயணித்துள்ளனர்.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த குறித்த உழவு இயந்திரம் வீடொன்றின் வேலியை பிய்த்துக் கொண்டு நுழைந்து கோழிக் கூட்டின் மீது மோதியதில் கூட்டிலிருந்த 30 கோழிகள் இறந்துள்ளது.
அத்துடன் மட்காட்டில் உட்கார்ந்து பயணித்தவர் தவறி கீழே விழுந்து சில்லுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி, அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில்,சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 8ம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த நல்லதம்பி யோகேஸ்வரன் (வயது41) என்ற இரு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சாரதி மற்றும் உயிரிழந்தவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், தப்பி ஒடிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.