யாழ். நாக விகாரை மீது தாக்குதல் !

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது மர்ம நபர்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது இனம் தெரியாத மர்ம நபர்கள் கற்களால் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் நாக விகாரையின் முகப்பில் உள்ள புத்தர் சிலையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் புத்தர் சிலைக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்படுள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்தை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சீ.சீ.ரி.வி காணொளிகள் பெறப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir