மண்சரிவுவில் சிக்கியிருந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று  மண்சரிவு ஏற்பட்டதில் நால்வர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று மண்மேடுட்டில் சிக்கியிருந்த 48 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மண் மேட்டின் சிக்கியுள்ள மூவரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் நேற்று ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது நேற்று ஆண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் மூவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று காலை குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir