நாவலப்பிட்டியில் கைதான 15 பேருக்கு பிணை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலப்பிட்டியில் நேற்றுஆர்ப்பாட்டம் முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்ஜீவ உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றிரவு நாவலப்பிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதமான சரீர பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir