மோட்டார் சைக்கிளை களவாடிய, 13 வயது சிறுமி கைது

மோட்டார் சைக்கிள் களவாடல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமியை காலி – கிதுலாம்பிட்டிய சிறுவர் தடுப்பு நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு காலி நீதவான் லக்மினி விதானகமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, அடுத்த வருடம் முதலாம் திகதி வரை குறித்த சிறுமி அங்குத் தடுத்து வைக்கப்படுவார்.

 

காலி – யக்கலமுல்ல பிரதேசத்தில் களவாடச் சென்ற குற்றச்சாட்டில் குறித்த சிறுமியும் மற்றுமொரு இளைஞனும் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் தப்பியோடியுள்ளார்.

 

பிரதான சந்தேகநபர் சிறுமியின் தாயுடன் தொடர்பில் இருந்தமை பின்னர் தெரியவந்தது. பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை யக்கலமுல்ல காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir