அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் நாட்டை வந்தடைந்தார்

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ( Robert Kaproth ) இன்று இலங்கை வந்தடைந்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது டுவிட்டர் செய்தியில், ரொபர்ட் கப்ரோத் ( Robert Kaproth ) தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கம் மற்றும் பொருளாதாரத் தலைவர்களை சந்திப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சியின் முன்னோக்கி செல்லும் வழி குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir