இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஜப்பானில் பராமரிப்பாளர் வேலை வாய்ப்புகளுக்கான பதிவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வானது 2022 நவம்பர் 15 ஆம் திகதி பத்தரமுல்ல கொஸ்வத்தையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தலைமையகத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணக்கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் கீழே உள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
