ஐஸ் போதைப்பொருள் வியாபாரிகள் கைது!!

ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பிரதான போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் உதவியாளர் ஒருவரும் அவருடன் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ பதினாறு கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வத்தளை, வெவெல்துவ வீதி பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் இந்தியாவில் தலைமறைவாகியுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புல அல குண என்ற சின்னையா குணசேகரவின் நெருங்கிய நண்பர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு 14, கொழும்பு 9 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளை சேர்ந்த 29, 30 மற்றும் 49 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir