க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir