ஜனாதிபதியின் கீழ் முக்கிய அமைச்சுகள்!

நான்கு முக்கிய அமைச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் வகிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 44(3) இன் கீழ் பிரதமருடன் கலந்தாலோசித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது .

அதற்கமைய நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர், தொழில்நுட்ப அமைச்சர், மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் மற்றும் ,முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய பொறுப்புக்களை ஜனாதிபதி தொடர்ந்தும் வகிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir