வாரயிறுதியில் மின்வெட்டு

வாரயிறுதியில் 1 மணிநேரம் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும் நவம்பர் 14 ஆம் திகதி திங்கட்கிழமை 02 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன் மூலம் மின்வெட்டு கீழ்க்கண்டவாறு அமுல்படுத்தப்படும்.

நவம்பர் 12 மற்றும் 13:

குழுக்கள் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W

மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை 1 மணி நேரம்

நவம்பர் 14:

குழுக்கள் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W

பகல் நேரத்தில் 1 மணி நேரம் மற்றும் இரவில் 1 மணி நேரம்

You May Also Like

About the Author: kalaikkathir