யால’வின் ஒரு பகுதி இரவு நேர சபாரியாகும் சாத்தியம்

யால பூங்காவின் ஒரு வலயத்தில் வனவிலங்குகளை ஒழுங்குபடுத்தும் திட்டமாக இரவு நேர சபாரியை திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

யால பூங்காவின் மொத்த பரப்பளவில் ஐந்தில் இரண்டு பகுதி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய பகுதிகளையும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir