மஹவ – யாழ் ரயில் சேவை ஐந்து மாதங்களுக்கு நிறுத்தம்

பழுதடைந்த புகையிரத பாதையை சீரமைக்கும் வரை ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவை நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வன்னி மாவட்ட சபை உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹவயில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ரயில் ஜனவரி 15ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்பட வேண்டும். ரயில் யாழ்ப்பாணம் வரை தொடர்ந்து இயங்கியது. அதை சீரமைக்காததால், தரையில் இருந்து நகர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த ரயில் பாதை 5 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir