சிறுநீரக கடத்தல் தொடர்பில் ஆராய 7 பேர் கொண்ட குழு

சிறுநீரக உறுப்புகள் பொருத்தப்பட்டதாக கூறப்படும் தனியார் மருத்துவமனை தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழுவை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் 05 நிபுணர்கள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் வெளியான உண்மைகள் மற்றும் ஏனைய உண்மைகள் என கூறப்படும் மனித உறுப்பு தொடர்பில் மாற்று அறுவை சிகிச்சை விரிவான விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆலோசனையின் பேரில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir