கறுப்பினத்தவரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; 30 பொலிஸாரை தனிமைப்படுத்த நடவடிக்கை!!

அமெரிக்க கறுப்பினத்தவரின் கொலைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைத்த பொலிஸாரை தனிமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது,

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸார் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த பொலிஸார் அத்திடியவில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படவு்ளளனர்,

இதேவேளை முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் நடவடிக்கையின் போது பொலிஸார் நடந்து கொண்டுவிதம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir