யாழ்ப்பாணத்திற்கு புதிய ஆளுநர்

யாழ்ப்பாணத்தின் புதிய பதில் ஆளுநராக மருதலிங்கம் பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் எனவும், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பதவி உயர்வு காரணமாக வெற்றிடமாக இருந்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் பதவிக்கு மரதலிங்கம் பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றும் ரூபவதி கேதீஸ்வரன் யாழ்.வின் நிரந்தர அரசாங்க அதிபராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir