சந்தையில் போலி நாணயத்தாள் : இருவர் கைது

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதிப் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (08) மதியம் ஸ்டேஸ் வீதி பகுதியில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருளை எடுக்க முயன்றனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று போலி ஆயிரம் ரூபா நாணயத்தாளுடன் இருவரையும் கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (09) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir