ஜனாதிபதி ரணில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா நடத்தும் Voice of Global South Summit மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 20 அரச தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் எதிர்வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir