மூன்று புதிய தூதுவர்களை நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

மூன்று புதிய தூதுவர்களை நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, லெபனான் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவராக கபில சுசந்த ஜயவீரவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக HMGRRK விஜேரத்ன மெண்டிஸை நியமிப்பதற்கும் உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு, எத்தியோப்பியா கூட்டாட்சிக்கான இலங்கையின் தூதுவராகவும், ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் கே.கே.தேஷந்த குமாரசிறியை நியமிப்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் நியமனங்களை உறுதிப்படுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir