பல பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை

பல பிரதேசங்களில் இன்று(12) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று(12) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிரிய, ஹொரண, பண்டாரகம, வல்மில்ல, பாணந்துறை, கெசல்வத்தை, மொரட்டுவ, கிரிபேரிய, பிலியந்தலை, கஸ்பேவ, வதர, மடபட, கும்புக மற்றும் ரைகம ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir