தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக அவுஸ்திரேலிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பொலிஸார் தங்களின் சாட்சியங்களை இறுதி செய்யகூடிய வகையில் இந்த உத்தரவு பிறபிக்கப்படது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றில், நீதவான் டேவிட் பிரைஸ், இன்று இந்த வழக்கை பெப்ரவரி 23-ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

தனுஷ்க பெப்ரவரியில் நீதிமன்றில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir