குற்ற பத்திரிகையை எதிர்கொள்ள ஜனகா தயார்

தமக்கு எதிராக மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையை எதிர்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (29) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி நீக்கம் தொடர்பான குற்றப்பத்திரிகை தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்கான சட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir