‘தேர்தலை ஒத்திவைக்கும் ஜனாதிபதி ஊடக பிரிவு’

ஜனாதிபதி ஊடக பிரிவு தேர்தலை ஒத்திவைக்கும் பொறிமுறையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைய உறுப்பினர் பி. எஸ். எம். சார்ள்ஸ் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் மறைக்கப்படுகின்றாரா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த அவர், ஜனாதிபதி ஊடகப் பிரிவு பயங்கரவாத கும்பல் போன்று செயற்படுவதாகவும், அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் நாட்டின் அரசியலை கையாள்வதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir