பொது நிறுவனங்களுக்குச் சொந்தமான நிதி மேலாண்மை வரைவுக்கு அங்கீகாரம்

பொது நிறுவனங்களின் நிதியை முறையாக நிர்வகிக்கும் நோக்கில் சட்டமூலமொன்றை சமர்பிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களால் பராமரிக்கப்படும் வரவு செலவுத் திட்ட நிதியை முறையாகக் கண்காணித்து அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் தயாரிக்கப்பட உள்ளதாக அமைச்சரவை தீர்மான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir