மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 291 பேர் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மாலைதீவில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்த இக்குழுவினர், UL 102 எனும் ஶ்ரீலங்கன் விசேட விமானம் மூலம் முற்பகல் 11.36 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனைக்கு அறிக்கை வரும்வரைக்கும் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள 04 ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்குவதற்கான வசதிகள் அவர்களுக்குச் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir