அடுத்த வாரம் மீண்டும் வேலை நிறுத்த போராட்டம்?

 

வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகிய தொழிற்சங்கங்கள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வங்கித் தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் புதிய திருத்தத்தை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிகை விடுத்து வருகின்றனர்.

இதன்படி, தமது கோரிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்தால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரித்துள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir