அரச அச்சகரின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரசாங்க அச்சக அதிகாரியின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக வாக்குச் சீட்டுகளை வழங்குவதில்லை என்ற அவரது முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அரச அச்சகர் மட்டுமன்றி பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தேர்தல்கள் ஆணைக்குளுவிடன் இணைந்து செயற்படுவது அவசியமாகும் என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுளா கஜநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir