ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்களுக்கு இடையே மோதல்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்கள் இடையே இன்று (15) அதிகாலை மோதல் ஏற்பட்டுள்ளது.

முகாமைத்துவ பீடம் மற்றும் கலைப் பீட மாணவர்கள் ஆகிய இரு குழுக்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதலர் தினத்தன்று கட்டப்பட்ட பந்தல் தொடர்பாக ஏற்பட்ட தகராறே மோதலுக்கு காரணம்.

பின்னர், பொலிசார் தலையிட்டு மாணவர்களை கலைத்தனர். காயமடைந்த மாணவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

You May Also Like

About the Author: kalaikkathir