அரச அச்சகத்திற்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

அரச அச்சகத்திற்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கடிதம் நேற்று பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

போதிய பொலிஸ் பாதுகாப்பு இன்மையால் உள்ளுராட்சி மன்ற வாக்குகள் அச்சிடும் பணிகள் தடைபட்டுள்ளதாக அரசாங்க அச்சகத்தின் பிரதானி திருமதி கங்கானி லியனகே தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரை அச்சகத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அச்சகத்தின் தலைவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir