கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,884 ஆக அதிகரித்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,884 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கட்டாரிலிருந்து வந்து அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்ட இருவர், முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் சென்னையிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் அடங்கலாக நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 1,252 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 621 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 11பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir