எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க 3 தனியார் நிறுவனங்கள்

இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க மூன்று தனியார் நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி பெறவுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுமார் 10 தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதிக்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், விண்ணப்பங்களை ஆய்வு செய்த சிறப்புக் குழு, மூன்று நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்ததாகவும் குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir