இலங்கை பிணைகள் – பரிவர்த்தனை ஆணைக்குழு புதிய தலைவராக பைசல் சாலிஹ்

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (SEC) புதிய தலைவராக பைசல் சாலிஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2023 பெப்ரவரி 20 முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனத்தின் (SLID) தலைவராக உள்ள அவர், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வர்த்தக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவையில் 40 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir