சனத் நிஷாந்தவுக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சட்டத்தரணிகளான ப்ரியலால் சிறிசேன மற்றும் விஜித ஹேரத் மற்றும் இலங்கை நீதிச் சேவை சங்கம் (JSASL) ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உண்மைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

You May Also Like

About the Author: kalaikkathir