விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு ரூ. 56,000 மில்லியன்

இந்த வருடம் விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், பயிர்களில் போதிய இலாபம் கிடைப்பதில்லை என, விவசாயிகளிடம் இருந்து கிடைத்துள்ள குறிப்பை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir