எரிபொருள்களின் விலைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக ஊடகங்களுக்கான அறிக்கையில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருக்கிறார்.
அவரது அறிக்கையின்படி,
ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 340 ரூபாவாக இருக்கும்.
ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 375 ரூபாவாக இருக்கும்.
ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 325 ரூபாவாக இருக்கும்.
சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 465 ரூபாவாக இருக்கும்.
மண்ணெண்ணையின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 295 ரூபாவாக இருக்கும்.