கொரோனாத் தொற்றுக்குப் பின்னர் அதிக மாதாந்திர சுற்றுலாப் பயணிகளின் வருகையை மார்ச் மாதத்தில் இலங்கை பதிவு செய்துள்ளது.
மார்ச் மாதம் முழுவதும் உலகின் பல பாகங்களிலிருந்தும் 125,495 பயணிகள் இலங்கைக்கு வருகைதந்ததாக இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிகத் தரவு காட்டுகிறது.
2023 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இலங்கைக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்திற்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125,495 ஆக இருந்தது என்றும் மார்ச் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்களிப்புச் செய்த முதல் மூன்று நாடுகளாக ரஷ்யா, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியன காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.