மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவில் இரத்ததான முகாம்

நாட்டில் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்று தள்ளாடி படை முகாமில் இரத்த தான முகாம் இடம் பெற்றது.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஏ.ஏ.ஐ.ஜே.பண்டார அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த இரத்ததான முகாம் இடம் பெற்றது.

இதன் போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை தந்திருந்தனர்.

குறித்த இரத்ததான முகாமில் சுமார் 150 இராணுவத்தினர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir