பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க சமூக வலைத்தளங்களை பாவிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் பிணையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு சிட்னி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
31 வயதான தனுஷ்க குணதிலக்க, சிட்னியின் டவுனிங் சென்டரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் தனது பிணை நிபந்தனை மாற்றத்துக்காக விண்ணப்பித்திருந்தார்.
அவுஸ்திரேலியாவில், பெண் ஒருவரின் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட தனுஷ்க, டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கு முதலில் தடை விதிக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரிக்குப் பின்னர் வட்ஸ் அப் பயன்படுத்துவதற்கும், இரவில் வெளியே செல்லவும் நீதிமன்றம் அனுமதித்தது.
இந்த நிலையில், தற்போது பிணையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் குணதிலக்க தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் கணக்குகளைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
T01