அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கவுள்ளது எனவும், இதன் மூலம் வெப்பநிலை 2 பாகை செல்ஸியஸ் முதல் 4 பாகை செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 5 பாகை செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.