சிறைக்கைதிகள் செய்த குற்றத்தின் தன்மை எதுவாக இருந்தாலும் அவர்களைக் கவனித்துக்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
1934 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக நாட்டின் சிறைச்சாலைக் கட்டளைச்சட்டத்தை மனிதாபிமான முறையில் திருத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை எடுத்துரைத்த அமைச்சர், தற்போதுள்ள சிறைச்சாலைகளில் மரண தண்டனைக் கைதிகளுக்குப் புனர்வாழ்வளிக்க 6 பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறு குற்றங்கள் செய்தவர்களை வீட்டுக் காவலில் வைப்பதற்காகப் புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறினார்.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 26,000 நபர்களில் ஏறக்குறைய 8,000 பேர் இதுவரை குற்றவாளிகள் எனக் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
T01
