அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது, அவை விற்கப்படும் என்னும் அர்த்தத்தைக் கொண்டிருக்கவில்லை என நிதி – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.
கேகாலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சியம்பலாபிட்டிய, இந்த அரச நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஏகபோகங்களைக் குறைத்து, இறுதியில் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்க முடியும் என விளக்கமளித்தார்.
முக்கியமான விடயம் என்னவென்றால், தற்போதுள்ள ஏகபோகங்களை உடைத்துச் சந்தையில் உருவாக்கப்படும் போட்டியின் மூலம் கிடைக்கும் இலாபத்தைப் பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம், அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நிறுவனங்களிடமிருந்து அரசாங்கமானது, கணிசமான வரி வருவாயை வசூலிக்க முடியும் என்று சியம்பலாபிட்டிய விளக்கினார்.
பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது உண்மையில் ஒரு நல்ல விடயம் என்பதை நாங்கள் மக்களுக்குக் காட்ட முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார்.
T01
