இளம் பெண்ணாகக் காட்டிக்கொண்டு 2 மில்லியன் ரூபா மோசடியிலீடுபட்ட மூவர் கைது!

பேஸ்புக்கில் தம்மை இளம்பெண்ணாகக் காட்டிவிட்டு தனியார் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரிடமிருந்து 2 மில்லியன் பணத்தை வாங்க முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் உயர் அதிகாரியுடன் பேஸ்புக் மூலம் உறவை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், முதலில் ஓர் இளம் பெண்ணின் புகைப்படங்களை அவருக்கு அனுப்பி, குறித்த பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்துபவர் தாமே எனக் கூறி, அதிகாரியின் அந்தரங்கப் புகைப்படங்களைப் பெற்றுள்ளனர்.

பின்னர் அந்தரங்கப் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்போவதாகவும். இல்லையெனில் முதற்கட்டமாக 50,000 ருபாவினைத் தருமாறும் சந்தேகநபர்கள் அவரை அச்சுறுத்தினர்.

பாதிக்கப்பட்ட அதிகாரி, குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொலிஸாரின் அறிவுறுத்தலின் பேரில், ஒரு மில்லியன் ரூபாவைத் தருவதாகக் கூறி சந்தேக நபர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

குறித்த இடத்தில் வைத்து கட்டானை பொலிஸாரினால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் மூவரும் அதுருகிரிய பிரதேசத்தில் சாரதிகளாகக் கடமையாற்றியவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கட்டானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

T01

NOTED

You May Also Like

About the Author: kalaikkathir