வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலி!

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் யானை வேலியின் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் தொடர் யானைகள், பன்றிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள தோட்டக் காணி ஒன்றுக்கு யானை வேலி போடப்பட்டிருந்ததுடன் குறித்த வேலிக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை அவதானிக்காது குறித்த வேலி ஊடாகச் சென்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய உலகநாதன் கஜந்தன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

T2

You May Also Like

About the Author: kalaikkathir