ATM அட்டைகளால் மோசடி செய்த 24 வயது இளைஞர் கைது

ATM அட்டைகள் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 24 வயதுடைய பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்படும் போது 15 ATM அட்டைகளை வைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர், ATM இல் பணம் எடுக்க வருபவர்களுக்கு உதவுவதாகக் கூறி ATM அட்டையின் இரகசிய இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு, ATM அட்டைகளை வைத்து, அதற்குப் பதிலாகப் போலி ATM அட்டையினை வழங்குவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிலியந்தலை, கொட்டாவ, தெஹிவளை, மிரிஹான மற்றும் மஹரகம உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களுக்கு 50 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir