நான்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் குறித்த இடமாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வடமேற்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான லலித் பதிநாயக்க, ராஜித ஸ்ரீ தமிந்த, அஜித் ரோஹன மற்றும் சஜீவ மெதவத்த ஆகியோருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்படுவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
T02
